Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்… சுக்குநூறாக நொறுங்கிய வாகனங்கள்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

கார்-வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த நிலையில், 5 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பேய்குளம் பகுதியில் பொன்னுத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு சந்திரபோஸ் என்ற மகன் உள்ளார். இவர்கள் அனைவரும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நத்தகாடையூர் பகுதிக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டனர். இவர் அப்பகுதியில் ஒரு மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று வர முடிவு செய்து பொன்னுத்துரை, சித்ரா, சந்திரபோஸ், பொன்னுத்துரையின் அண்ணன் வெள்ளத்துரை, வெள்ளை துரையின் மனைவி கற்பகம் போன்றோர் திருச்செந்தூருக்கு காரில் சென்றுள்ளனர். இதனை அடுத்து சுவாமி தரிசனம் செய்து விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது இவர்களின் கார் திருச்சி-கோவை ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த வேன் இவர்களது காரின் மீது பயங்கரமாக மோதி விட்டது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேர் மற்றும் அந்த வேனை ஓட்டி சென்ற மாவடியன் போன்றோரை அருகில் உள்ளவர்கள் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன் பிறகு மருத்துவமனையில் சித்ராவை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வெள்ளகோவில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |