Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பேருந்தை முந்த முயற்சி… வாலிபரின் கதி… கதறும் அழும் பெற்றோர்…!!

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மகன் பொன்னியின் செல்வன் நேற்று திருவாரூர்-நாகை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற அரசுப் பேருந்தை முந்த முயற்சித்துள்ளார். அப்போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த பொன்னியின் செல்வனை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு நாகப்பட்டினம்அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த பிறகு பொன்னியின் செல்வன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து நாகை டவுன் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |