Categories
தேசிய செய்திகள்

ஒன்றுக்கொன்று மோதிய வாகனங்கள்… பறிபோன பல உயிர்கள்… நடந்த கோர சம்பவம்…!!

எண்ணெய் லாரி மீது கார் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள யமுனா விரைவு சாலையில் பயணம் செய்து கொண்டிருந்த எண்ணெய் லாரி மீது கார் ஒன்று எதிர்பாராதவிதமாக பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் எண்ணெய் லாரி கவிழ்ந்து விட்டது. மேலும் இந்த காரில் பயணம் செய்த 2 பெண்கள் உட்பட 7 பேர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீட்பு குழுவினர் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி விட்டனர். அதன்பின் அவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |