லாரி மோதியதில் கூலித்தொழிலாளி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள கோரஅள்ளி பகுதியில் வசித்து வந்தவர் கூலித்தொழிலாளி குமரேசன். இவர் சம்பவம் நடந்த அன்று வீட்டில் வெளியே செல்வதாக கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பின்னர் அவர் அங்குள்ள பஸ் நிலையம் அருகே சென்றபோது இருசக்கர வாகனம் நிலைதடுமாறியதில் கீழே விழுந்துள்ளார். அந்த சமயத்தில் இருசக்கர வாகனத்தின் பின்னே வந்த லாரி அவர் மீது எதிர்பாராமல் ஏறியுள்ளது.
இதில் குமரேசன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குமரேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.