இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் பகுதியில் வசித்து வருபவர் கூலித்தொழிலாளி ராஜேந்திரன். இவர் தனது சொந்த வேலைக்காக வாலாஜாவை நோக்கி இருசக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவ்வழியில் வேகமாக வந்த ஒரு லாரி எதிர்பாராத விதமாக ராஜேந்திரன் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார்.
உடனே அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வாலாஜா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.