Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய சரக்கு வேன்… நிலைதடுமாறிய டிரைவர்… 3 பேர் படுகாயம்..!!

திண்டுக்கல்லில் காய்கறி ஏற்றி சென்ற சரக்கு வேன் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 3 பேருக்கு மோசமாக காயங்கள் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யலூர் பகுதியில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். ராமர் அய்யலூர் முடக்கபட்டி பகுதியில் வசித்து வரும் வெள்ளைச்சாமி, வேல்முருகன், கிருஷ்ணன் ஆகிய மூவருடனும் காய்கறி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சரக்குவேனை ஓட்டி திண்டுக்கல் நோக்கி சென்றுள்ளார். சிறுமலை 1-வதுகொண்டை ஊசி வளைவு பகுதி வழியே சென்றபோது வேன் தனது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியுள்ளது.

இதில் டிரைவர் நிலை தடுமாறியதில் வேன் தடுப்புச் சுவர் ஒன்றின் மீது வேகமாக மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததுள்ளது. அதில் ராமருடன் சென்ற மூன்று பேருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு வந்த சிலர் அவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திண்டுக்கல் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |