Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கூலி தொழிலாளி மீது மோதிய வாகனம் – புதுக்கோட்டையில் விபத்தால் உயிரிழப்பு …!!

இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வண்ணார்பட்டியை சேர்ந்தவர் திருமாறன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று பட்டுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் திடீரென்று எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த திருமாறனை அருகில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனளிக்காத காரணத்தினால் திருமாறன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |