திடீரென இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பகுதியில் பரமசிவம்-பூரணி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். பரமசிவம் ஏற்கனவே இறந்துவிட்டதால் பூரணி சுகன்யா என்பவரது வீட்டில் வீட்டு வேலை செய்து பிழைத்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சுகன்யா தனது இருசக்கரவாகனத்தில் பூரணியை ஏற்றுக்கொண்டு கடைவீதிக்கு சென்றுள்ளார்.
அப்போது திடீரென பூரணி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே தவறி விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த பூரணி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனளிக்காத காரணத்தினால் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.