Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்… நிலைதடுமாறியதால் நடந்த விபரீதம்… திண்டுக்கல்லில் சோகம்..!!

திண்டுக்கல்லில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் நிலைதடுமாறி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெத்தயகவுண்டம்பட்டி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயகுமார் என்ற மகன் இருந்தார். இவர் சில நாட்களாக பித்தளைப்பட்டி பகுதியில் உள்ள தனது சகோதரியான பாண்டிமீனா வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பித்தளைப்பட்டி-தர்மத்துப்பட்டி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

பித்தளைபட்டியில் உள்ள ஓடை பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராமல் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியுள்ளது. இதில் விஜயகுமார் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே வேகமாக விழுந்துள்ளார். இதனால் படுகாயமடைந்த விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |