திண்டுக்கல்லில் அரசு பேருந்து மோதி விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒண்டிவடநாயக்கன்பட்டி பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வடிவேலு என்ற மகன் இருந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தந்தை, மகன் இருவரும் வயலுக்கு உரம் வாங்குவதற்காக செம்மடைப்பட்டி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். வடிவேல் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளார். அதன்பின் இருவரும் செம்மடைப்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சாலையில் நின்றுள்ளனர்.
அப்போது திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக வடிவேல் மோட்டார் சைக்கிளின் மீது வேகமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த வடிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். வடிவேலின் தந்தை பழனிச்சாமி சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.