Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மகனுடன் சென்ற தாய்… தவறி விழுந்ததால் நேர்ந்த சோகம்… கதறும் மகன்…!!

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதியில் வசித்து வருபவர் விஜயகுமார். இவர் தற்போது கரூர் மாவட்டத்தில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் குடியிருப்புகள் கட்டும் பணியில் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இதனால் அவர் தற்போது கரூரில் வசித்து  வருகிறார். இவர் தனக்கு சமையல் செய்து தருவதற்காக தனது தாயான லட்சுமியை தன்னுடன் அழைத்துகொண்டு திருச்சியில் இருந்து கரூருக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் உப்பிடமங்கலம் சாலையில் வந்து கொண்டிருக்கும்போது வேகத்தடையை கடக்க முயற்சித்துள்ளார். அப்போது லக்ஷ்மி இருசக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதனால் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லட்சுமியை உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |