மோட்டார் சைக்கிள் டிராக்டர் மீது மோதியதில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளத்தூர்நாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் கிருஷ்ணசாமி. இவர் தனது சொந்த வேலைக்காக அருகில் உள்ள கிராமத்திற் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அதன்பின் அவர் திரும்பி வரும்போது முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டரை முந்த முயன்றுள்ளார். அந்த சமயத்தில் இரு சக்கர வாகனம் நிலை தடுமாறியதில் டிராக்டர் மீது மோதி கீழே விழுந்துள்ளார்.
இதில் கிருஷ்ணசாமி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிருஷ்ணசாமியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.