திருமணமாகி மூன்று மாதங்களில் புதுமாப்பிள்ளை விபத்தில் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மானூரிலிலுள்ள அயூப்கான்புரம் கோவிலை சேர்ந்தவர் ராமர் திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில், நேற்றைய முன் தினம் ராமர் தன் ஊரிலிருந்து மானூருக்கு மோட்டார் சைக்கிளில் இரவு வேளையில் புறப்பட்டுள்ளார். வழியில் சென்று கொண்டிருக்கையில் திடீரென மோட்டார் சைக்கிள் சாலையோரமாக நெல் பயிரிடும் வயலுக்குள் பாய்ந்துவிட்டது. மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி வயலில் பாய்ந்ததால் ராமருக்கு கன்னம் கால் கை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டு வயலிலிருந்த சகதியில் சிக்கி மூச்சு விட முடியாமல் மயங்கி உள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு ராமரை பரிசோதித்த மருத்துவர்கள் ராமர் இறந்துவிட்டார் என கூறியுள்ளனர். இதனையடுத்து தகவலறிந்த மானூர் காவல்துறையினர் மருத்துவமனைக்குச் சென்று ராமரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். திருமணமான மூன்று மாதங்களில் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் அப்பகுதி மக்களுக்கு பெரும் சோகத்தை கொடுத்துள்ளது.