வாகனம் மோதிய விபத்தில் மூதாட்டி பலியான சம்பவம் குறித்து திருமங்கலம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் உள்ள மேலக்கோட்டையை சார்ந்தவர் பாண்டியம்மாள். இவர் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது பஸ் நிலையம் அருகில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் திடீரென்று பாண்டியம்மாள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.
இதனால் படுகாயம் அடைந்த பாண்டியம்மாள் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்ததால் அருகில் இருந்தவர்கள் பாண்டியம்மாளை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காத காரணத்தினால் பாண்டியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.