பேருந்து வயல் வெளிக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூரிலிருந்து அரசு பேருந்து ஒன்று காலை 10 மணியளவில் திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் கருங்குளம் பகுதியில் இந்த பேருந்து சென்று கொண்டிருந்த போது, அப்பகுதியில் பெட்ரோல் பங்க் அமைப்பதற்கான பணி நடைபெற்று கொண்டிருப்பதால் வயல்வெளிகளில் மணல் கொட்டி நிரப்பிக் கொண்டிருந்த லாரி திடீரென சாலையின் குறுக்கே சென்றுள்ளது.
அந்த சமயம் பேருந்து லாரி மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுனர் பேருந்தை திருப்பும் போது, எதிர்பாராதவிதமாக பேருந்து வயல் வெளிக்குள் கவிழ்ந்துவிட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த செய்துங்கநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்தில் சிக்கி இருந்த பயணிகளை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.