சரக்கு ஆட்டோ இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள பாலநாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் கௌதம். இவருக்கு திருமணமாகி ஒரு கைக்குழந்தை உள்ளது. இந்நிலையில் கௌதம் தனது வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். அவர் தென்னிலை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த சரக்கு ஆட்டோ கௌதம் ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார்.
உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சரக்கு ஆட்டோ ஓட்டி வந்த டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.