Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நெல் மூட்டை ஏற்றி சென்ற லாரி… எதிர்பாராமல் நடந்த விபரீதம்… சிவகங்கையில் பரபரப்பு..!!

சிவகங்கையில் நெல் மூட்டை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புதுவயல் பகுதியிலிருந்து கோவிலூர் பகுதியில் உள்ள நெல் குடோனுக்கு 150 நெல் மூட்டைகளை ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. காரைக்குடியில் உள்ள வாட்டர் டேங்க் அருகே லாரி சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் லாரி டிரைவர் பதறியடித்து வண்டியை விட்டு இறங்கி ஓடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து காரைக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் லாரி முழுவதுமாக எரிந்து சேதம் அடைந்துள்ளது. மேலும் லாரியில் இருந்த 150 நெல் மூட்டைகள் எரிந்து சாம்பலாகின. இந்த விபத்து குறித்து காரைக்குடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் லாரி தீப்பிடித்து எரிந்ததாக தெரியவந்துள்ளது.

Categories

Tech |