Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

யாருனே தெரியலயே… பள்ளத்தில் கவிழ்ந்த கார்… படுகாயமடைந்த டிரைவர் … போலீஸ் விசாரணை..!!

திண்டுக்கல் அருகே மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த கார் தீடிரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த டிரைவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பன்றிமலை அருகே கேரளா பதிவெண் பொருத்தப்பட்ட கார் மலைப்பகுதியில் வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி எதிர்பாராத விதமாக 15 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் விபத்தில் படுகாயமடைந்த டிரைவரை மீட்டு கன்னிவாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கன்னிவாடி காவல்துறையினர் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த விசாரணையில் டிரைவர் மட்டுமே காரில் வந்தது தெரியவந்தது. ஆனால் காரில் வந்தவர் யார் ? அவர் எதற்காக அங்கு வந்தார்? என்பது குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை. காவல்துறையினருக்கு கிடைத்த கார் பதிவு எண்ணை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்குள்ளான அந்த காரில் பொன்ராஜ் என்ற பெயர் எழுதப்பட்டிருந்தது. மேலும் செல்போன் எண்ணும் குறிப்பிடபட்டிருந்தது. அந்த எண்ணிற்க்கு காவல்துறையினர் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் காரில் விபத்துக்குள்ளானவர் யார்? என்று காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |