Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர்… வழியில் நடந்த விபரீதம்..!!

நாகையில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதில் முதியவர் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பஷீர் முகமது என்னும் முதியவர் வசித்து வந்தார். இவர் ஆடு வியாபாரம் செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று பஷீர் முகமது மோட்டார் சைக்கிளில் வேளாங்கண்ணியில் இருந்து திருத்துறைப்பூண்டி பகுதிக்கு சென்றுள்ளார். திருப்பூண்டி பகுதி வழியாக சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து முதியவர் கீழே விழுந்தார். இந்த விபத்தில் பஷீர் முகமது-க்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கிருந்து நாகை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக முதியவர் அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து அங்கிருந்து சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து கீழையூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |