Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பெண் பார்க்க சென்றவர்கள்… எதிரே வந்த சரக்கு ஆட்டோ… விசாரணையில் போலீஸ்…!!

சரக்கு ஆட்டோ இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் கிராமத்தில் வசித்து வந்தவர் கோவிந்தராஜ். இவரும் அதே பகுதியில் வசிக்கும் மரியதாஸ் என்பவரும் பெண் பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சுத்தமல்லி வரை சென்று பின்னர் அங்கிருந்து வீடு திரும்பும்போது துனிச்சிக்குட்டை ஏரிக்கு அருகே வந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த சரக்கு ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதியுள்ளது.

இதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த கோவிந்தராஜ் கீழே விழுந்து அவரின் தலையில் சரக்கு ஆட்டோ ஏறி இறங்கியுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் சரக்கு ஆட்டோ டிரைவரான மாயகிருஷ்ணன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |