திண்டுக்கல்லில் மோட்டார்சைக்கிள் நிலை தடுமாறியதில் ஐ.டி கம்பெனி ஊழியர் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள சுபாஷினி நகரில் மாதேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சபரிநாதன் என்ற மகன் இருந்தார். இவர் ஐ.டி கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சபரிநாதன் மதுரைக்கு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள அஞ்சலி ரவுண்டானா மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் ஏற முயற்சித்த போது நிலை தடுமாறியது.
இதனால் மோட்டார் சைக்கிள் பால சுவற்றில் மோதி சபரிநாதன் தவறி கீழே விழுந்தார். இதில் சபரிநாதன் மோசமான காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தாடிக்கொம்பு காவல்துறையினர் சபரிநாதன் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.