காரில் பொருத்தப்பட்டு இருந்த பம்பர் அகற்றப்பட்டு இருந்ததால் விபத்தில் சிக்கிய திமுக பிரமுகர் உள்ளிட்ட 4 பேர் உயிர் பிழைத்து உள்ளனர்
திராவிட முன்னேற்ற கழகத்தின் விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் ராஜேஷ் தனது நண்பர்களுடன் காரில் திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென டிப்பர் லாரி ஒன்று சாலையின் குறுக்கே புகுந்ததால் கார் அந்த வாகனத்தின் மீது மோதியது. காரில் பம்பர் இல்லாத காரணத்தால் நேரடியாக காரின் முன்பக்கம் டிப்பர் லாரியில் மோதியது. இதனால் நொடிப்பொழுதில் காரில் இருந்த பலூன் விரிந்து உயிர் சேதம் ஏற்படாமல் தடுத்துள்ளது.
இதுகுறித்த தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகையில், “காரில் பம்பர் பொருத்தப்பட்டு இருந்தால் பலூன் வெளிவருவதற்கு தாமதமாகி பயணித்தவர்களின் உயிர் போயிருக்கும்” என தெரிவித்துள்ளனர். வாகனத்தில் பொருத்தப்பட்டிருக்கும் பம்பர்களை அரசு அகற்ற அரசு வலியுறுத்தியது. ஆனால் பல லட்சம் கொடுத்து வாங்கிய வாகனங்கள் சேதம் அடைந்து விடும் என கருதும் மக்கள் பொருட் சேதத்தை விட உயிர்சேதம் பெரியது என நினைப்பதில்லை.
தலைக்கவசம் அணிவது, சீட் பெல்ட் போடுவது, வாகனங்களிலிருந்து பாம்பரை அகற்றுவது போன்ற விதிமுறைகளை அரசு போக்குவரத்து துறையுடன் இணைந்து நடைமுறைப்படுத்தினால் அது மக்களின் நலனுக்காக தான் இருக்கும் எனவே நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என்று நினைத்து போக்குவரத்து விதிகளை மதித்து செயல்படுவோம்.