மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரின் மீது மோதிய விபத்தில் அம்மா -மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பூரணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு சுஜன்ராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் முருகன் தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூரில் இருக்கும் குலதெய்வ கோவில் கொடைவிழாவிற்காக தனது தாயார் முத்துலட்சுமி மற்றும் மகன் சுஜன்ராஜனோடு சென்றுள்ளார். இதனையடுத்து விழா முடிந்த பிறகு அங்கிருந்து முருகன் தனது தாய் மற்றும் மகனோடு பைக்கில் ஊருக்கு புறப்பட்டுள்ளார்.
இவர்கள் அவனிகோனேந்தல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக குளக்கரையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவரின் மீது முருகனின் பைக் பலமாக மோதிவிட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முத்துலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முத்துலட்சுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் படுகாயமடைந்த முருகன் மற்றும் சுஜன்ராஜனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே முருகன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். அதன்பின் சுஜன்ராஜனுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.