இருசக்கர வாகனம் நிலை தடுமாறிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் பெரியசாமி என்ற முதியவர் வசித்து வந்தார். இவர் சம்பவம் நடந்த அன்று தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வேகமாக சென்று கொண்டிருந்த போது திடீரென்று பிரேக் போட்டுள்ளார். அதில் வாகனம் நிலை தடுமாறி பெரியசாமி கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் அளிக்காத காரணத்தினால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.