சாலையை கடக்க முயற்சித்தபோது பெண் ஒருவர் கார் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் நோவா ஸ்கோடியா பகுதியில் 63 வயதான பெண் ஒருவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு சாலையை நான்கு நாட்களுக்கு முன்னர் கடக்க முயற்சித்துள்ளார். அப்போது சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் அந்தப் பெண் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார்.
பின்னர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணை அருகிலிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் அளிக்காத காரணத்தினால் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்