இங்கிலாந்திற்கு சொந்தமான சரக்கு விமானத்தின் முன் சக்கரம் உடைந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய நாட்டின் தலைநகரான மாஸ்கோவிலிருந்து, இங்கிலாந்து ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 787 Draemliner என்ற சரக்கு விமானம் லண்டனிலிருக்கும் Heathrow என்ற விமான நிலையத்திற்கு வந்துள்ளது. இதனையடுத்து Heathrow விற்கு வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானத்தின் முன் சக்கரம் திடீரென்று உடைந்துள்ளது.
இதனால் விமானத்தின் முன்பகுதி தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதுகுறித்து இங்கிலாந்து ஏர்வேஸ் நிறுவனம் கூறியதாவது, இந்த விபத்து நடைபெறும் போது சரக்கு விமானத்தில் பயணிகள் எவரும் இல்லை என்றும், விபத்து எவ்வாறு நடைபெற்றது என்பது குறித்த விசாரணை மிகவும் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்கள்.