ஈரானில் வாக்கு எண்ணிக்கை 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில், வாக்குப் பெட்டிகளை எடுத்துச் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் நாட்டின் ஜனாதிபதியாக இருந்து வரும் Hassan என்பவரின் 2 ஆண்டுக்கான ஆட்சிக்காலம் தற்போது முடிவடைந்துள்ளது. இதனால் கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி ஈரானில் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 90% எண்ணபட்டதையடுத்து Raisu என்பவர் வெற்றி பெறுவதற்கு தேவைப்படுகின்ற வாக்குகளைப் பெற்று ஈரான் நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ளார். இருப்பினும் இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் khuzestan என்னும் மாகாணத்தில் வைத்து வாக்குப் பெட்டிகளை எடுத்துச் சென்ற ஹெலிகாப்டர் திடீரென்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து khuzestan மாகாணத்தின் கவர்னர் கூறியதாவது, வாக்குப் பெட்டிகளை எடுத்துச் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 11 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், ஒருவர் பலியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.