மலேசியாவில் நேற்று இரவு நெடுஞ்சாலையில் சாலை விபத்து ஏற்பட்டு குழந்தைகள் உட்பட 10 நபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவில் இருக்கும் செலாங்கோர் மாகாணத்தில் நேற்று இரவு சுமார் 11:40 மணியளவில் நெடுஞ்சாலையில், மூன்று வாகனங்கள் மற்றும் லாரி, ஒன்றின் மீது ஒன்று மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் லாரிக்கு அடியில் வாகனங்கள் சிக்கிக்கொண்டது. இக்கோர விபத்தில் குழந்தைகள் 8 பேர் உட்பட 10 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் ஏழு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. லாரிக்கு அடியில் மாட்டிக்கொண்ட வாகனங்களை வெளியேற்றுவதற்கும், வாகனங்களில் மாட்டிக்கொண்ட நபர்களை மீட்கவும், மீட்பு குழுவினர் கிரேன் பயன்படுத்தியுள்ளனர்.