Categories
தேசிய செய்திகள்

ஒடிசாவில் கோர விபத்து…. ஒருவர் மரணம்…. இளைஞர் உயிரை பறித்த டிக்டாக்…!!

ஒடிசா மாநிலத்தில் இளைஞர்கள் டிக்டாக்கில் வீடியோ பதிவு செய்து கொண்டே இருசக்கர வாகனம் ஓட்டிய போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

ஒடிசா மாநிலம் காத்பூர்  மாவட்டத்தைச் சேர்ந்த சிவசங்கர் என்பவர் தனது மைத்துனர் உடன் ஆலயத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பினார். இருவரும் டிக்டாக்கில் வீடியோ எடுத்து கொண்டேன் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

அப்போது அவர்களது வாகனத்தின் மீது ட்ரக் ஒன்று திடீரென மோதியதில் விபத்து ஏற்பட்டது .படுகாயமடைந்த இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்த போதிலும் சிவசங்கர் பரிதாபமாக உயிரிழக்க மைத்துனனுக்கு  ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |