பயணிகள் பேருந்து கவிழ்ந்ததில் 13 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் சிந்து மாகாணத்தில் பஞ்சாபில் இருந்து வந்த பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பேருந்தில் 43 பேர் பயணம் செய்துள்ளனர். அதில் 6 பேர் சம்பவ இடத்திலும் 7 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர். மேலும் மீதமுள்ள 30 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்திற்கான காரணம் ஓட்டுநர் அதிவேகமாக சென்றதால் பேருந்து தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது என காவல் துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் பலியான மற்றும் காயமடைந்தவர்கள் அனைவரும் பஞ்சாபில் இருந்து வந்தவர்கள் எனவும் ரம்ஜான் விடுமுறையை தனது வீட்டில் கழித்துவிட்டு கராய்ச்சியில் வேலைக்காக சென்று கொண்டிருந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.