பாகிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரே நாளில் இரண்டு விபத்துகள் ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் நேற்று முன்தினம் வெவ்வேறு பகுதிகளில் நடந்த விபத்துகளில் 5 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். பலுசிஸ்தான் மாகாணத்தில் இருக்கும் பிஸின் என்னும் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்தின் மீது ஒரு லாரி பயங்கரமாக மோதியதில் விபத்து ஏற்பட்டு மூவர் உயிரிழந்ததோடு, 25 நபர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.
அதனைத்தொடர்ந்து, பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் ராஜன்பூர் மாவட்டத்தில் அதிவேகத்தில் வந்த லாரிகள் ஒன்றின் மீது ஒன்று பலமாக மோதியதில் இரண்டு பேர் பலியானதாகவும், மூவர் படுகாயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.