அகில இந்திய அளவில் விபத்துகளை குறைத்ததற்காக தமிழகத்திற்கு சிறந்த மாநிலத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
சாலை விபத்துகள் ஏற்படுவதற்கு காரணம் வாகன ஓட்டிகள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல். போன்றவற்றால் விபத்துக்கள் அதிகமாக ஏற்பட்டு வந்தன. இதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. மேலும் இது குறித்த விழிப்புணர்வும் வாகன ஓட்டிகள் இடையே ஏற்படுத்தி வந்தது. விபத்து ஏற்பட்டாலும் தலைக்கவசம் அணிவதன் மூலம் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க முடியும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தது.
இதனால் தற்போது விபத்துகள் கணிசமான அளவில் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அகில இந்திய அளவில் விபத்துகளை குறைத்ததற்காக தமிழகத்திற்கு சிறந்த மாநிலத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது. தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி வழங்கியுள்ளார்.