Categories
உலக செய்திகள்

நைஜீரிய நாட்டின் நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து… கார் மீது மோதிய பேருந்து… 15 பேர் உயிரிழப்பு…!!!

நைஜீரிய நாட்டில் கார் ஒன்றின் மீது பேருந்து மோதி தீ விபத்து ஏற்பட்டதில் 15 நபர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியா என்னும் மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் அமைந்துள்ள ஓயோ மாகாணத்தில் இபரபா என்னும் நகரத்தில் நெடுஞ்சாலையில் சென்ற பேருந்து எதிரில் அதி வேகத்தில் வந்து கொண்டிருந்த காரின் மீது பலமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் பேருந்தும் காரும் தீ பற்றி எரிந்தது.

தீ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்ததால், கார் மற்றும் பேருந்திலிருந்து வெளியேற முடியாமல் பலர் மாட்டிக் கொண்டனர். இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே 15 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Categories

Tech |