Categories
தேனி மாவட்ட செய்திகள்

சரக்கு வேன் மோதி விபத்து….. தூக்கி வீசப்பட்ட தூய்மை பணியாளர் மரணம்…. தேனி அருகே சோகம்…!!

தூய்மைப் பணியாளர் சரக்கு வேன் மோதிய விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அடுத்த மேல்மந்தை பகுதியை சேர்ந்த பரமசிவம் ஒப்பந்த அடிப்படையில் தேவதானப்பட்டிப் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று பொம்மிநாயக்கன்பட்டி சாலையில் தனது இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அச்சமயம் தேனியிலிருந்து ஒட்டன்சத்திரம் சென்ற சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக பரமசிவன் வாகனத்தின் மீது மோத தூக்கி வீசப்பட்ட பரமசிவம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தேவதானபட்டி காவல்துறையினர் விரைந்து வந்து பரமசிவத்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இருக்கும் சூழலில் தூய்மை பணியாளர்களின் அயராது உழைக்கும் செயலை மக்கள் போற்றி வணங்கி வரும் நிலையில் தூய்மைப் பணியாளரான பரமசிவம் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |