Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சரக்கு வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதி…. பள்ளி மாணவர் பலி…. திருச்சியில் பெரும் பரபரப்பு….!!!!

வேன் மோதி பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூர் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு அருண் என்ற பிளஸ் 2 படிக்கும் மாணவன் இருந்தார். இவரும் கொள்ளிடம் பகுதியைச் சேர்ந்த நித்திஷ் என்ற மாணவனும் ஒன்றாக படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு டியூஷனுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் இவர்களுடைய மோட்டார் சைக்கிள் முன்புறமாக சரக்கு சென்ற சரக்கு வேன் மீது மோதியுள்ளது.

இதில் மாணவர்கள் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அருகில் உள்ளவர்கள் காயமடைந்த இருவரையும் மீட்டு காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதில் அருண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நிதிஷுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர்.

இதனை அடுத்து அருணின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அருணின் உடலை பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் சரக்கு வேனை ஓட்டிச் சென்ற டிரைவரான அலெக்ஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |