மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தனது நடனத்தின் மூலம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் எம்பிஏ மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.
புனேவில் MBA படித்து வரும் சுபி ஜெயின் என்ற மாணவி 15 நாட்கள் கல்விசார் பயிற்சிக்காக இந்தூர் வந்துள்ளார். இதையடுத்து அங்கு நிலவும் போக்குவரத்து நெரிசலை கண்ட மாணவி சுபி ஜெயின், அதனை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட முயன்றார்.
அதன்படி மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை வாகன நெரிசல் மிகுந்த பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதோடு மட்டுமில்லாமல், தலைக்கவசம் அணிய வேண்டும் எனவும், சீட் பெல்ட் போட வேண்டும் என்பதையும் தனது நடன அசைவு மூலம் சுபி ஜெயின் வலியுறுத்தி வருவது அங்கிருந்த அனைவரது கவனத்தையும் ஈர்த்து , மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.