சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி ஆலையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் இந்தியாவியில் பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்புள்ளது.
சவுதி அரேபியாவில் இருந்து தான் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இங்கிருந்து ஒவ்வொரு நாளும் உலகின் பிற நாடுகளுக்கு 98 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. உலகின் மொத்த எண்ணெய் வள நாடுகளில் ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கு அளவு சவூதி அரபியாவில் தான் நடைபெறுகிறது. பல நாடுகள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கின்றன. இதில் இந்தியாவும் ஒன்று.
இந்நிலையில் உலகில் மிகப்பெரிய சவுதி கச்சா உற்பத்தி ஆலையான ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் உற்பத்தி பாதியாக குறைக்கப்படும் என்று தகவல்கள் சொல்கின்றன. எனவே வருகின்ற நாட்களில் எல்லாம் கச்சா எண்ணெய் விலை கடுமையாக இமாலய உயரத்தை எட்ட வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 67 டாலராக இருந்த நிலையில் இன்று வர்த்தகத்தில் 80 டாலர் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.