சென்னையில் கொரோனா அறிகுறியுடன் உள்ள 661 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர் என்று மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக வேகமாக பரவி வருகின்றது. தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் மட்டும் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோன வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738ல் இருந்து 834 ஆக அதிகரித்துள்ளது. இதில் 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் 34 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் தான் 163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் இதுவரை 1,973 பேர் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தனர். அதில், 661 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா அறிகுறியுடன் உள்ள 661 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.