பலநாள் தேடி வந்த பிரபல ரவுடியை நேற்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ரவுடி ஒருவர் இன்று தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ராமநாதபுரம் காவல் நிலையத்தில் 2 கொலை வழக்குகளும் நெல்லை மாவட்ட காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குகளும் இருந்துள்ளன. மேலும் அந்த ரவுடிக்கும் கூலிப்படையினருக்கும் தொடர்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து நெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் அவரை தேடி வந்துள்ளனர். பல நாள் முயற்சி செய்த காவல்துறையினர் நேற்று அவரை தூத்துக்குடியில் வைத்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ரவுடியை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.