தமிழ் சினிமாவின் தனித்துவமான நாயகனாக வலம்வரும் விஜய் சேதுபதி, தற்போது பாலிவுட்டில் பிசியாகி உள்ளார்.
இவருக்கு அடுத்தடுத்து இந்தி பட வாய்ப்புகள் குவிகின்றன. சந்தோஷ் சிவன் இயக்கும் மும்பைகார், கிஷோர் பாண்டுரங் இயக்கும் காந்தி டாக்ஸ், மாஸ்டர் இந்தி ரீமேக், அந்தாதூன் இயக்குனருடன் ஒரு படம் என வரிசையாக நடித்து வருகிறார். இதுதவிர ஷாஹித் கபூருடன் வெப் தொடர் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.