நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கொரோனா தடுப்பு பணிக்காக நிதியுதவி அளித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றால் பாதிக்கபடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. ஆகையால் கொரோனா தடுப்பு பணிக்காக தங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையடுத்து பல திரை பிரபலங்களும் தங்களால் முடிந்த நிதி உதவிகளை கொரோனா தடுப்பு பணிக்காக அளித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் திரைப்பிரபலங்கள் ரஜினிகாந்த், சிவகுமார், ஏ.ஆர்.முருகதாஸ்,அஜித், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் வெற்றி மாறன் உள்ளிட்ட பலர் தங்களால் முடிந்த நிதி உதவியை வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் கொரோனா தடுப்பு பணிக்காக ஒரு லட்சம் வழங்கியுள்ளார். மேலும் சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் பெப்ஸி அமைப்புக்கும் அவர் ஒரு லட்சம் நிதியுதவி வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.