வெளிமாநில, நாடுகளிலிருந்து வருவோருக்கு முறையான பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் அதனுடைய பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது ஒருபுறமிருக்க வெளி மாநிலம், வெளி நாடுகளிலிருந்து தொடர்ந்து தமிழகத்தில் விமானம் மூலம் வருபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வர, அவர்களுக்கு முறையான பரிசோதனை மேற்கொள்ள படவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.
அதன்படி வெளிமாநிலம் அல்லது வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் பயணம் மேற்கொள்பவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படாமல் வெப்பநிலையை கணக்கிடும் கருவியை கொண்டு உடலை மட்டும் பரிசோதனை செய்து வீட்டில் 14 நாட்கள் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தி அனுப்பி வைக்கப்படுவதாகவும் முறையான பரிசோதனை மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் புகார் எழுந்துள்ளது. இந்தப் புகாரின் படி, தினசரி காட்டப்படும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில், விமான பயணிகளின் எண்ணிக்கையும் சேர்க்கப்படுகிறதா? என்ற சந்தேகத்தையும் இது எழுப்பியுள்ளது.