Categories
உலக செய்திகள்

2000 அதிகாரிகள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள்.. பிரிட்டனில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

பிரிட்டனில் கடந்த 4 வருடங்களில் பாலியல் வன்கொடுமை தொடர்புடைய குற்றச்செயல்களில் 2000 காவல்துறை அதிகாரிகள் மற்றும் சமூக ஆதரவு அதிகாரிகள் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனில் சாரா எவரார்டு என்ற இளம்பெண்ணை காவல்துறை அதிகாரி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சம்பவம் நாடு முழுக்க கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதன் பின்பே, காவல்துறையினர் தொடர்பான குற்றச்சாட்டுகள் அதிகாரபூர்வமாக வெளிவர தொடங்கியுள்ளது.

தகவல் சுதந்திரச் சட்ட அடிப்படையில் கிடைத்த புள்ளி விவரங்கள் படி, குற்றம் சாட்டப்பட்ட 2000 காவல்துறை அதிகாரிகளில் 470 க்கும் அதிகமான பாலியல் குற்றங்கள், 18 குழந்தைகள் தொடர்பான பாலியல் குற்றங்கள் என்று மொத்தமாக 43 காவல்துறை படைகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதில் 39 படைகள் வேல்ஸ் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்தது. எனினும் பிரிட்டன் முழுக்க காவல்துறை அதிகாரிகள் மீது அதிக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. பணியின் போது சக பெண் பணியாளருடன் தவறான உறவு வைத்திருப்பது, போதைப்பொருள் விற்பனையாளர்களுடன்  தொடர்பு கொண்டிருப்பது மற்றும் உயிரிழந்தவர்களிடமிருந்து பணத்தை எடுத்துக்கொண்டது  போன்ற பல குற்றச்சாட்டுகள் உள்ளது. இதில் அதிகாரிகள் பலரிடம் ரகசியமாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |