ஆசியாவில் தேடப்பட்ட போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் நேற்று கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவில் டிசே சி லோப் என்ற நபர் போதைப்பொருள் கடத்தலில் மன்னராவார். சீனாவை சேர்ந்த இவர், கனடாவின் குடியுரிமையை பெற்று ஜப்பானிலிருந்து நியூசிலாந்து நாடு வரை ஆசிய பசிபிக் நாடுகளில் பல ஆயிரங்கள் கோடி மதிப்பு கொண்ட போதை பொருட்களை கடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த வருடத்தில் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் ஷிபோல் சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச காவல்துறையினர் அவரை கைது செய்தனர். ஆஸ்திரேலியா காவல்துறையினர் இவரை 10 வருடங்களாக தீவிரமாக தேடி வந்த நிலையில், இரண்டு வருடங்கள் போராடி கடைசியாக நேற்று கைது செய்து, ஆஸ்திரேலியாவிற்கு நாடு கடத்தியுள்ளனர்.
போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவராக திகழ்ந்த டிசே சி லோப், மெல்போன் விமான நிலையத்தில் கையில் விலங்குகளுடன் இழுத்துச் செல்லப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.