விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ என்ற தொடரின் மூலம் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானவர் நந்தினி. அதன்பிறகு தொடர்ந்து நிறைய சீரியல்களில் நடித்து வந்தார். மைனா நந்தினியின் முதல் திருமணம் பிரச்சனையில் முடிந்தாலும், இப்போது யோகேஷ் என்பவரை மறுமணம் செய்து ஒரு மகனை பெற்று இருக்கிறார். தனது கணவருடன் இணைந்து Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இப்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கடைசி போட்டியாளராக களம் இறங்கி சிறப்பாக விளையாடி வருகிறார்.
சமீபத்தில் யோகேஷ் ஒரு பேட்டியில் கூறியது, மைனா நிகழ்ச்சியில் இருப்பதற்காக பெயிடு புரொமோஷன் செய்வதாக கூறுகிறார்கள். அதில் கொஞ்சமும் உண்மை இல்லை. உண்மையை சொல்ல போனால், நாங்கள் புதிதாக கார் ஒன்று வாங்கி இருக்கோம். அதுக்கு இஎம்ஐ கட்டுவதற்கு படாத பாடு படுகிறேன். இரண்டு குடும்பத்தை பார்க்க வேண்டியது இருக்கிறது. இரண்டு வருமானத்தை வைத்து குடும்பத்தை பார்ப்பேனா? குழந்தையை பார்ப்பேனா? இல்லை அதெல்லாம் விட்டு பெயிடு புரொமோஷன் செய்வேனா? நாங்கள் அப்படியெல்லாம் செய்தது இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.