குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இன்று வெளியேறப் போகும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது .
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று ‘குக் வித் கோமாளி’. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து தற்போது இரண்டாவது சீசன் கலகலப்பாக நடைபெற்று வருகிறது . இதில் குக்குகளாக பாபா பாஸ்கர் , ஷகிலா ,மதுரை முத்து, பவித்ர லட்சுமி ,தர்ஷா குப்தா, அஸ்வின், கனி ,தீபா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் புகழ், பாலா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்ட பலர் கோமாளிகளாக வருகின்றனர்.
இதுவரை நடைபெற்ற எபிசோடுகளில் தீபா, மதுரை முத்து, தர்ஷா குப்தா ஆகியோர் வெளியேறியுள்ளனர் . சமீபத்தில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக சீரியல் நடிகை ரித்திகா உள்ளே நுழைந்தார் . இந்நிலையில் இன்று எலிமினேஷன் சுற்றில் ரித்திகா வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஒரு சில எபிசோடுகள் மட்டுமே இவர் கலந்து கொண்டிருந்தாலும் ரசிகர்களிடம் அதிக அளவு பிரபலமடைந்து விட்டார் .