Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ… படப்பிடிப்பில் தவறி விழுந்த பிரபல நடிகை… வைரலாகும் வீடியோ…!!!

பிரபல நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் படப்பிடிப்பின் போது தவறி விழுந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ‌.

கடந்த 2018 ஆம் ஆண்டு ‘ஒரு அடார் லவ்’ படத்தில் இடம்பெற்ற மாணிக்க மலராய பூவி என்ற பாடல் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரியா பிரகாஷ் வாரியர் . இந்தப் பாடலுக்கு இவர் கண்சிமிட்டிய வீடியோ இணையத்தில் தீயாய் பரவியது . இதையடுத்து ஸ்ரீதேவி பங்களா என்ற ஹிந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது . சமீபத்தில் நடிகை பிரியா’ ஹாப்பி நியூ இயர்’ படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு உதட்டை அசைத்து வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலானது .

படப்பிடிப்பில் தவறி விழுந்த நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் !  - Tamil Movie Cinema News

தற்போது நடிகை பிரியா செக் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்ட போது ஹீரோ முதுகில் ஓடிவந்து ஏற முயற்சித்த பிரியா தவறிக் கீழே விழுந்துள்ளார்  . உடனே  படக்குழுவினர் விரைந்து வந்து பிரியாவை தூக்கி நிறுத்தியுள்ளனர் . தற்போது இந்த வீடியோவை நடிகை பிரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . இதை பார்த்த ரசிகர்கள் எச்சரிக்கையாக இருங்கள் என பிரியாவுக்கு அறிவுரை கூறி வருகின்றனர் .

Categories

Tech |