லிபிய நாட்டில் எதிர்வரும் மாதத்தில் நடைபெறவுள்ள அதிபர் பதவிக்கான தேர்தலில் குழுக்களில் பிரிவை ஏற்படுத்த கூடியவராக கருதப்படும் தளபதி ஒருவர் போட்டியிடுவதற்கு வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
லிபிய நாட்டில் வருகின்ற டிசம்பர் மாதம் பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. அவ்வாறு நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் சர்வாதிகாரியின் மகனான சயீப் அல் இஸ்லாம் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் தற்போது குழுக்களிடையே பிரிவை ஏற்படுத்துபவராக கருதப்படும் காலிபா ஹிப்தர் என்னும் சர்ச்சைக்குரிய தளபதி அதிபர் பதவிக்கு போட்டியிடப் போவதாக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இதனையடுத்து சர்ச்சைக்குரிய தளபதி அதிபர் பதவிக்கு போட்டியிடப் போவதாக வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளதால் தேர்தல் முடிவடைந்த பின்பு உள்நாட்டு யுத்தம் ஏதேனும் ஏற்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.