பிரிட்டனில் தற்போது காய்ச்சல் பரவி வருவதால் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசிகள் வழங்க அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தொடர்ந்து இன்ஃப்ளூயன்ஸா நோய் பரவி வருகிறது. தற்போது பிரிட்டனில் குளிர்காலம் என்பதால் காய்ச்சலை கட்டுப்படுத்த மக்களுக்கு தடுப்பூசிகளை இலவசமாக வழங்கப்பட உள்ளது. கடந்த குளிர்காலத்தின் போது அங்கு 19 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டது. இதனால் இம்முறை இதைவிட 35 மில்லியன் அதிகமான மக்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு சாதனை படைக்கும் என்று அந்நாட்டு வல்லுனர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்தத் தடுப்பூசிகள் 2 முதல் 16 வயது வயதுடைய குழந்தைகள், 50 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவான உள்ள நபர்கள் ஆகியோருக்கு இலவசமாக தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளது. இதில் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசிக்கு பதிலாக மூக்கு வழியாக ஸ்ப்ரேயில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆரம்ப மற்றும் மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கும் இலவசமாக தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளது. இந்த காய்ச்சல் தடுப்பூசி வருகின்ற செப்டம்பர் மாதத்தில் இருந்து NHS- ல் இலவசமாக வழங்கப்பட திட்டமிட்டுள்ளது .