அரண்மனையில் தங்கள் இருவருக்கும் இடையே நடந்த சம்பவங்கள் குறித்து ஹரியின் மனைவி மெர்க்கெல் வெளியில் சொல்லி விடுவாரோ என்ற அச்சத்தில் இளவரசர் வில்லியத்தின் மனைவி கேட் மிடில்டன் இருக்கிறாராம்.
பிரிட்டன் இளவரசர் ஹரி அமெரிக்க நடிகையான மேகன் மெர்க்கெல் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். ஆனால் ஹரி மெர்க்கலை திருமணம் செய்வதில் தனக்கு விருப்பம் இல்லை என்று ஹரியின் சகோதரர் வில்லியம் கூறியிருந்தார். மேலும் ஹரி-மெர்க்கெல் இடையே இருக்கும் உறவை ஹரியின் கல்லூரி நண்பர்கள் மூலம் வில்லியம் முறிக்க முயன்றதாகவும் தகவல் வெளியானது. ஹரி மெர்க்கலை திருமணம் செய்துகொள்வதில் இளவரசர் வில்லியத்தின் மனநிலை எப்படி இருந்ததோ அதே மனநிலையில் நான் அவரது மனைவி கேட் மிடில்டனும் இருந்துள்ளார்.
இதுவே கேட் மிடில்டனுக்கும் மெர்க்கெலுக்கும் இடையே முதல் பிரச்சனையாக உருவானது. அதற்குப் பிறகு கேட் மிடில்டனுக்கு அரண்மனையில் முன்னுரிமை வழங்கப்படுவதால் அரண்மனை ஊழியர்கள் தன்னை புறக்கணிப்பது போன்ற எண்ணம் மெர்க்கலுக்குள் உருவாகியது. மேலும் சகோதரர்களுக்கு இடையே மனக்கசப்பு உருவாக கேட் மிடில்டன் தான் காரணம் என்று மெர்க்கெல் உறுதியாக நம்பினார். அதுமட்டுமின்றி ஹரி- மெர்க்கெல் தம்பதியருக்கு வில்லியம்- கேட் மிடில்டன் ஊழியர்களே பணிவிடை செய்துள்ளனர்.
ஆனால் அந்த ஊழியர்களுக்கும் ஹரி- மெர்க்கெலுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. எனவே தங்களுக்கு என்று தனி ஊழியர்களை வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஹரி- மெர்க்கெல் தம்பதியினர் முடிவெடுத்தனர். இதற்கிடையில் அரண்மனை ஊழியர்கள் மெர்க்கலை கேலி கிண்டல் செய்துள்ளனர். தற்போது அரண்மனையில் கேட் மிடில்டனுக்கும்- மெர்க்கலுக்கும் இடையில் நடந்த சம்பவங்கள் குறித்து மெர்க்கெல் ஒருவேளை வெளியில் சொல்லிவிடுவாரோ என்று இளவரசர் வில்லியத்தின் மனைவி (கேட் மிடில்டன்) அச்சத்தில் இருக்கிறாராம்.